பசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க… தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியாவில் உத்திரபிரதேசம், வாரணாசியில் குழந்தைகள் பச்சைத் தாவரங்களில் இருந்து எதையோ எடுத்து சாப்பிடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.

குறித்த புகைப்படத்தினை அவதானித்த அதிகாரிகள் விசாரித்த போது, வாரணாசி அருகே கொரைப்பூர் கிராமத்தில் உள்ள முசாஹர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு குழந்தைகள் தான் என்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தீயாய் பரவிய புகைப்படத்தினை அவதானித்த அதிகாரிகள் உதவி செய்வதற்கு முன் வந்தனர். தற்போது குழந்தைகளின் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு மற்றும் சில அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

சில குழந்தைகளின் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளர்களாகவும், மற்றவர்கள் தெருக்களில் பிச்சை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி கவுசல் ராஜ் சர்மா கூறுகையில், இந்த கிராமத்தின் குழந்தைகள் செடியிலிருந்து ஒருவகை பருப்பை சாப்பிடுவதாகவும், குழந்தைகளின் குடும்பங்கள் ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர் என்றும், இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் அதுமட்டுமின்றி கூடுதலாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.