ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள கடும் உத்தரவு

பிரதேச மட்டத்தில் தீர்மானங்களை எடுத்து, மக்களை அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிடைக்கக்கூடிய அனைத்து தரவுகளையும் பகுப்பாய்வு செய்து, ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படுவது, ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது, மூடப்படும் பகுதிகளை தீர்மானிப்பது அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் நடைபெறும் செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவில் மாற்றங்களைச் செய்யத் தேவையான எந்தவொரு தகவலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்களை சௌகரியப்படுத்தும் எந்தவொரு முடிவும் உள்ளூர் மட்டத்தில் எடுக்கப்படக்கூடாது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.