ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக 11 நாள்களில் 7 ஆயிரம் பேர் கைது – ஆயிரத்து 700 வாகனங்கள் தடுப்பு

நாடுமுழுவதும் ஊரடங்கு வேளையில் வீதிகளில் நடமாடிய 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

நாடுமுழுவதும் தொடர் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் மட்டும் இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிக் காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 11 நாள்களில் 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.