பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸின் வங்கிக்கணக்குகளின் இடைநிறுத்தக் காலத்தினை நீடிக்குமாறு உத்தரவு

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 24 வங்கிக்கணக்குகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டிருந்த காலத்தினை நீடிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினாலோ அல்லது அதற்காக செயற்பட்ட வேறு தரப்பினராலோ மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களினால் முறையற்ற விதத்தில் பெறப்பட்ட நிதியை வேறு தரப்பினருக்கு வழங்குவதைத் தடுக்கும் நோக்கில் சட்ட மா அதிபரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like