70 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 கைதிகள் விடுதலை!

IMG_6688


இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தினை  முன்னிட்டு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறு குற்ற சிறைத்தண்டனை  கைதிகளை பொது மண்ணிப்பின் கீழ்  இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்றினால் குற்ற செயல்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு மட்டக்களப்பு  சிறைச்சாலையில் வைக்கப்பட்ட சிறு குற்ற   தண்டனை கைதிகள்  10  பேர்   70 வது  சுதந்திர  தினத்தினை  முன்னிட்டு   மட்டக்களப்பு சிறைச்சாலை  அத்தியட்சர்   K.M.U.H அக்பர்  முன்னிலையில்   இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த  நிகழ்வில்  மட்டக்களப்பு  சிறைச்சாலை  பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன்   உட்பட   சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

IMG_6674


IMG_6678


IMG_6683

Get real time updates directly on you device, subscribe now.

You might also like