கொரோனாவின் உக்கிரம்! இத்தாலிக்குள் நுளைந்த அதி நவீன பறங்கும் விமானம் பற்றி வெளியான தகவல்

மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 718 பேரை வைரஸ் காவுகொண்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 37 ஆயிரத்து 820 பேர் உலக அளவில் மரணித்துள்ளனர்.

இந்த சூழலில் இத்தாலி மிக அதிக பாதிப்பு உள்ள நிலையிலேயே இந்த உதவி அமைப்பு உள் நுளைந்துள்ளது.

மேலும், ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள போதிலும் தற்போது உயிரிழப்புக்களின் வீதம் அதிகரித்துச் செல்கின்றமை பெரும் அச்சத்தையே ஏற்படுத்தி வருகின்றது.

பறக்கும் அதி நவீன ஹாஸ்பிட்டல் விமானத்தை, ஜேர்மனி இத்தாலிக்கு அனுப்பியுள்ளது. அதி நவீன வசதிகள் கொண்ட இந்த விமானத்தை இத்தாலிக்கு அனுப்பி, அங்கே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.

தேவைப்பட்டால் அவர்களை ஜேர்மனிக்கு அழைத்து வருமாறும். அன் நாட்டு தலைமை அமைச்சர் அஞ்சலா மேர்கிள் கட்டளையிட்டுள்ளார்.

குறித்த ஏ- 310 ஏர் பஸ் விமானத்தில், 44 படுக்கை வசதிகளும். 16 அவசர சிகிச்சை படுக்கைகளும் உள்ளது.

ஜேர்மனி தனது நேச நாடான இத்தாலிக்கு பெரும் உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.