3 வைத்தியசாலைக்கு ஒளிச்சு ஒளிச்சு அப்பா அம்மாவை அழைத்துச் சென்று எல்லோருக்கும் கொரோனா பரப்பிய இரு பிள்ளைகள்?

வெள்ளவத்தையில் வயதான தம்பதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதை கொழும்பு மாநகர சபை வைத்தியக்குழு உறுதிசெய்துள்ள நிலையில்.

அவர்களது பிள்ளைகள் இருவர் சில வாரங்களுக்கு முன்பு இந்தியா சென்று வந்துள்ளதாகவும் அவர்கள் மூலமாக பெற்றோர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனவும் தமது பெற்றோரின் நோய்களை மறைத்து. களவாக 3 தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

குறித்த தம்பதிகளுக்கு உடல் நிலை பாதிப்படைய. சும்மா வைத்தியசாலைக்கு கொண்டு போனால் கொரோனா என்று சொல்வார்கள் என்பதனால்.

அவர்களை 3 தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு போய் காட்டியுள்ளார்கள், இவர்களது பிள்ளைகள். ஆனால் இவர்கள் எதற்கு பயந்தார்களோ அதே நோய் தான் இவர்களுக்கு தொற்றியுள்ளது என்பதனை இன்று தான் உணர்ந்துள்ளார்கள்.

இவ்வாறு தாம் புத்திசாலிகள் என நினைத்து, ஒளித்து ஒளித்து கொண்டு போய் 3 தனியார் வைத்தியசாலையில் காட்டி. அங்குள்ள மருத்துவர்களுக்கு அங்குள்ள தாதிமார்களுக்கும் கொரோனாவை கொடுத்துள்ளார்களா இவர்கள்.

தற்போது இந்த குடும்பம் அடங்கலாக 45 பேரை பொலிசார் வெள்ளவத்தையில் தனிமைப்படுத்தியுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது.

எனவே மக்களே உங்களுக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ, காய்ச்சல், தொண்டையில் நோ, இருமல், எதுவாக இருந்தாலும். இது சாதாரண இருமல் என நினைத்து. ஒளித்துச் சென்று உங்களுக்கு தெரிந்த இடத்தில் காட்டவேண்டாம்.

உடனடியாக நீங்கள் தனிமைப்படுத்தி , முறையாக வைத்தியசாலையை அணுகவும். அப்படி என்றால் மட்டுமே நீங்கள் இந்த கொரோனா தொற்றை மற்றவர்களுக்கு பரப்பாமல் இருப்பீர்கள். இருமல், காய்ச்சல் இருந்தாலே ஒரு முறை கொரோனாவுக்கான பரிசோதனை செய்து விடுவது நல்லது.