வரலாற்றில் மிக மோசமான சரிவை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை இன்று பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 192.65 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 187.55 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கம், ரூபா மற்றும் தங்கத்தின் பெறுமதி மீது அழுத்தம் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.