ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இரு வீட்டாருக்கிடை யில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக முடிந்த நிலையில் தந்தையும், மகனும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கொடிகாமம் சந்தை வீதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் செ.லோகேஸ்வரன் (வயது-45) மற்றும் அவரது மகன் லோகேஸ்வரன் மதுசன் (வயது-20) ஆகியோருடன் இரு பெண்களும் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாய்ச் சண்டை கைகலப்பாக மாறி குழுமோதலாக மாறிய நிலையில் வீடு புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறி விக்கப்பட்டதை அடுத்து காயமடைந்த இருவரையும் பொலிஸார் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்த்ததுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.






