மனிதர்களைப் போல் ”Hello, Bye Bye” சொல்லும் டால்பின்! (Video)


டால்பின்களுக்கு முறையான பயிற்சியளித்தால் அவற்றை மனிதர்களைப் போல் ”Hello” மற்றும் ”Bye Bye” போன்ற வார்த்தைகளைக் கூற வைக்க முடியும் என விலங்கின ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் பயிற்சியின் மூலம் மனிதர்களைப் போல கிளிகளைப் பேச வைக்க முடியும். ஆனால், மனிதர்களைப் போல மற்ற பாலூட்டி விலங்குகள் பேசுவது என்பது மிகவும் அரிது. இந்நிலையில், டால்பின்களை மனிதர்களைப் போல ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என சில ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்பொழுது கில்லர் வகை திமிங்கலம் ஒன்று மனிதர்களைப் போல ‘ஹலோ, பை-பை’ சொல்லி அசத்தி வருகிறது.

“டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் மனிதர்களைப் போல தான் கேட்கும் ஒலியை அப்படியே கூற முயலும் சில உயிரினங்களாகும். பிரான்சின் ஆன்டிபெஸ் பகுதியில் செயற்பட்டுவரும் நீர்வாழ் உயிரினங்களின் கண்காட்சி சாலையில் உள்ள ‘விக்கி’ என்ற பெண் திமிங்கலம் மனிதர்களைப் போல பேச முயல்கிறது. இதற்கு தன்னுடைய மூக்கில் இருக்கும் பகுதியை இந்த திமிங்கலம் பயன்படுத்துகிறது. ‘ஹலோ’, ‘அமி’, ‘ஒன்’, ‘டூ’, ‘த்ரி’ போன்ற வார்த்தைகளையும் விக்கி பேசி வருகிறது” என இங்கிலாந்தில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் இணை ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜோசப் கால் குறிப்பிட்டுள்ளார்.

வருங்காலத்தில் ‘விக்கி’யுடன் அடிப்படை கலந்துரையாடல் சாத்தியப்படும் என ஸ்பெயினிலுள்ள மாட்ரிட் பல்கலைக்கழக இணை ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜோஸ் ஆப்ராம்சன் தெரிவித்துள்ளார்.

டால்பின் ஹலோ, பை-பை முதலிய வார்த்தைகளைப் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


Get real time updates directly on you device, subscribe now.

You might also like