இரவோடு இரவாக சாலையைத் திருடி விற்ற மகா கெட்டிக்காரன் கைது!

இரவோடு இரவாக சாலையில் போடப்பட்டிருந்த 500 தொன் கான்கிரீட் கலவையை உடைத்து விற்ற மகா கெட்டிக்காரனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சாங்கேசு என்ற கிராமத்திற்கு செல்லும் 800 மீட்டர் சாலை இரவோடு இரவாக திடீரென மாயமானது.

கான்கிரீட்டால் போடப்பட்டிருந்த அந்த சாலையை யாரோ ஒரு மர்ம நபர் வெட்டிப் பெயர்த்து எடுத்துச் சென்று விட்டார்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ‘ஷிகு’ என்ற புனைப்பெயர் கொண்ட ஒரு நபர் இந்த சாலையை வெட்டி எடுத்து, திருடிச் சென்றது தெரிய வந்தது.

அந்த சாலையின் 500 தொன் கான்கிரீட் கலவையை உடைத்து நொறுக்கி அதை விலைக்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை 795 அமெரிக்க டொலர்களுக்கு விற்றிருக்கிறார். இதனால், பொலிசார் இந்த மகா கெட்டிக்காரரை கைது செய்துள்ளனர்.