யாழில் சமுர்த்தி நிவாரணம் வழங்குவதில் பழிவாங்கல்! – மக்கள் பெரும் அவதி

யாழ் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கிராம மக்களுக்கு கொரோணா கடன் கொடுப்பனவான் ரூபா 5000/- வழங்குவதில் சமுர்த்தி உத்தியோகத்தர் பழிவாங்குவதாக சமுர்த்தி உத்தியோகத்தரால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யுமாறு மூன்று மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பு கடிதம் எழுதியதன் எதிரொலியே இது என்றும் சமுர்த்தி முகாமையாளரிடமும் பிரதேச செயலருக்கும் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் பலருக்கு பல மாதங்களாக சமுர்தி நிவாரணம் வழங்காமலும் வந்துள்ளார்.

இந் நிலையில் தற்போது கொரோணா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து தாம் எந்தவித வருமானமும் இன்றி இருப்பதாகவும் தெரிவித்டுடன் பலர் உணவிநண்றியும் வாடுவதாகவும் தெரிவி்த்தனர்.இது தொடர்பில் பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு ஏற்கனவே கேட்கப்பட்டபோது அவர்கள் தமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடித்திற்க்கு தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று அவரை பல தடவை தொடர்பு கொண்டும் பதில் கிடைக்வில்லை.பிரதி பிரதேச செயலரை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதேச செயலர் வெளியில் சென்றுள்ளதாகவு்ம அரை மணித்தியாலத்தின் பின் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவொத்திருந்ததுடன் இவ் இடர் காலத்தில் இவ்வாறு வழங்காது நிறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

எனினும் ஆழ்யவளையில் மக்களின் இப்போதாவது மன்தாபிமானத்தின்பாற்பட்டது. பட்டியிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு சம்மந்தப்பட்டவர்களதும் பொறுப்பாகும்.