அமேசான் காட்டில் வாழும் பழங்குடியின மக்களுக்கும் பரவிய கொரோனா வைரஸ்.. பரவியது எப்படி?..

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தற்போது மனிதர்கள் மிக அரிதாகவே வாழும் அமேசான் காட்டிலும் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து, தற்போது உலகமெங்கும் இருக்கும் அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது.

இதை கட்டுக்குள் வைப்பதற்கு அனைத்து நாடுகளும் போராடி வருகின்றனர். ஆனாலும் இதன் தாக்கத்தை மக்கள் உணராமல் வெளியில் சுற்றி வருவதே வேதனை அளிக்க கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில், அமேசான் காட்டில் பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், பழங்குடியின பெண் ஒருவர் நகரத்திற்குள் சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்ததாகவும் அந்த மருத்துவருக்கு கொரோனா இருந்ததால் அந்தப் பெண்ணுக்கும் கொரோனா தொற்றி கொண்டதாகவும் இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் குடும்பத்தினர்களையும் நகரத்திற்கு இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரேசில் அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கனவே பிரேசில் நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 255 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமேசான் காட்டிலும் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.