கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா மறைத்த இரகசியம்! தடுமாறும் உலக வல்லரசுகள்

சீனாவில் கொறோனா தொற்று மிக அதிகமாகப் பரவிய ‘வூகான்’ நகரத்தில் இருந்து சீனத் தலைநகர் ‘பெய்ஜிங்’ வெறும் 1200 கி.மீ. தொலைவில்தான் இருக்கின்றது.

ஆனால் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கொறோனா தொற்றுக் காரணமாக இதுவரை 8 பேர் மாத்திரமே இறந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

அதேபோன்று வூகான் நகரத்தில் இருந்து சீனாவின் பொருளாதார தலைநகரமான ‘சங்காய்’ வெறும் 840 கி.மீ. தொலைவில்தான் இருக்கின்றது. கொறோனாவின் தோற்றுவாயான வுகான் நகருக்கு மிக அருகாக உள்ள சங்காய் நகரில் கொறோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5 மாத்திரம்தான்.

ஆனால் வுகான் நகரில் இருந்து சுமார் 15000 கி.மீ. தொலைவில் உள்ள அமெரிக்காவில் 5000 இற்கும் அதிகமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதேபோன்று வுகான் நகரத்தில் இருந்து 9000 கி.மீ. தொலைவில் உள்ள இத்தாலியில் 13500 இறப்புக்களும், 10000 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்பெயினில் 10000 மரணங்களும், 9000 கி.மீ. தொலைவில் உள்ள பிரான்ஸ் இல் 4000 மரணங்களும் இடம்பெற்றுள்ள. இது எப்படிச் சாத்தியம்?

வூகான் நகருக்கு அருகில் இருக்கும் சீனாவின் மற்றய நகரங்களை விட்டுவிட்டு ‘நோய் காவிகளான’ மனிதர்கள் எவ்வாறு அமெரிக்காவுக்கும்,ஐரோப்பிய நாடுகளுக்கும் மாத்திரம் பயணமானார்கள்?

சீனா ஒரு முக்கிய இரகசியத்தை மறைக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதற்கு இதுதான் காரணம்.

உலகளவில் எழுப்பப்படுகின்ற இதுபோன்ற சில சந்தேகங்கள் பற்றிப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: