கோரோனாவைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு 128.6 மில்லின் டொலர் நிதி – உலக வங்கி ஒப்புதல்

கோரானா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 128.60 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை உலக வங்கி வழங்குகிறது.

இலங்கை கோவிட் -19 அவசரகால வெளிப்பாடு மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை திட்டத்தின் கீழ் இந்த நிதியை கடனாக வழங்க உலக வங்கியின் பணிப்பாளர் சபையால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கோரவிட் -19 நோய் தொற்றை கண்டறிதல், கட்டுப்படுத்தல் மற்றும் பொதுச் சுகாதார சேவையை மேம்படுத்தல் ஆகிய தேவைகளுக்கு இந்த நிதியைப் பயன்படுத்த உலக வங்கி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.