யாழில் மேலும் மூவருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே இவ்வாறு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

15,36 வயதுடைய பெண்கள் பிள்ளைகள் இருவர் மற்றும் 20 வயதுடைய இளைஞன் மூவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் அரியாலையைச் சேர்ந்தவர்கள் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்ரவன் தெரிவித்தார்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 250 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like