கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக கொலை செய்து, குழந்தையை வெளியே எடுத்த பெண்..!!

கர்ப்பிணியான தனது தோழியை கொலை செய்து குழந்தையை வெளியில் எடுத்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியுயோர்க் நகரின் பிரான்ங்ஸ் பகுதியை சேர்ந்த ஏஞ்சிலிக் சுட்டன் என்னும் பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளதால், அவரது காதலர் பேட்ரிக்கடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சுட்டனின் தோழி ஆஸ்லே வேட் தானும் கர்ப்பிணியாக இருப்பதாக தனது காதலனுடன் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் சுட்டனின் திருமணம் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் திகதி என முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமண நாளிற்கு முன் சுட்டனை பார்த்த அவரது தோழி திருமண பரிசு தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். மேலும், ஆஸ்லேயின் வீட்டிற்கு சென்ற சுட்டனை கொலை செய்து சுட்டனின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்த ஆஸ்லே, தனது காதலனுக்கு தொலைபேசி மூலம் தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகத்தில் ஆஸ்லேயின் வீட்டிற்கு விரைந்த காதலன் ஆஸ்லேயின் தோழி இறந்துள்ளதை கண்டுபிடித்து, பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் ஆஸ்லேயிற்கு 40 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். மேலும், அதிஸ்டவசமாக கொலை செய்யப்பட்ட சுட்டனின் குழந்தை காப்பாற்றப்பட்டு நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Get real time updates directly on you device, subscribe now.

You might also like