கொழும்பு நகரை முழுமையாக Lockdown செய்ய தீர்மானம்? அதிகாரிகள் தீவிர நடவடிக்கை

எதிர்வரும் சில நாட்களில் கொழும்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரை முழுமையாக Lockdown செய்வதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

சில நாட்களில் கொழும்பில் முழுமையாக கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிக்கவும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும் உயர்மட்டத்தில் இன்னும் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை பொலிஸ் நிலையங்களும் முழுமையான அடைப்பின் போது மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து பணிப்புரைகளை எதிர்பார்ப்பதாக ஆங்கில் ஊடகம் கூறுகிறது.

இலங்கையில் 159 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் கொழும்ப மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 3 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.