ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர் (வீடியோ)

ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து யாழ் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புசபை ஊழியர்கள் இன்றையதினம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்

இவ் ஆண்டிற்கான 25 சதவிகித சம்பள உயர்வை வழங்க வேண்டும், ஏற்கனவே காணப்படுகின்ற சம்பள முரண்பாடுகள் சரி செய்யப்படல் வேண்டும் , அரச மற்றும் தனியார் கூட்டமைப்பு நிறுத்தப்படல் வேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்

இதற்கமைவாக யாழ் பண்ணையிலுள்ள மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் மற்றும் பருத்தித்துறை பிராந்திய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்றையதினம் தமது பணிகளை இடைநிறுத்தி இந்த கவனயீர்ப்பை மேற்கொண்டனர்
அலுவலகத்திற்கு முன்பாக இவ் ஊழியர்கள் கூடி தமது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்

Get real time updates directly on you device, subscribe now.

You might also like