கொரோனா துயரங்களுக்கு நடுவே பிரான்ஸ் மக்களை உலுக்கிய சம்பவம்: முக்கிய நபரை கைது செய்த பொலிஸ்

பிரான்சில் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே அல்லாஹு அக்பர் என கத்தியபடியே வாள்வெட்டில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சின் Romans-sur-Isère நகரிலேயே குறித்த திடீர் வாள்வெட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

பொதுமக்கள் மத்தில் திடீரென்று புகுந்து அல்லாஹு அக்பர் என கத்தியபடியே அந்த நபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு பல்பொருல் அங்காடி அருகே இச்சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து பொலிசார், மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதியில் குவிந்துள்ளனர்.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட 33 வயது நபரை தீவிரவாத தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர். சூடான் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் அவர் என கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மெக்ரான் தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதுடன்,

குறித்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.