நாய்களுக்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்த நபர்!! இலங்கையில் இப்படியும் ஒரு மனிதரா?

இலங்கையில் மனிதாபிமானமிக்க நபர் ஒருவர் தொடர்பில் பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
சமகாலத்தில் மனிதர்களை மனிதர்களே மதிக்காமல் நடந்து வரும் நிலையில், நாய்களுக்காக தனது வாழ்க்கை நபர் ஒருவர் தியாகம் செய்துள்ளார்.பத்தரமுல்ல, பெலவத்த பிரதேசத்தை சேர்ந்த நிஹால் டி சில்வா நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களை பாராமரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.தினமும் 120 – 150 நாய்களின் பசியை போக்குவதற்கான நடவடிக்கையை நிஹால் டி சில்வா மேற்கொண்டு வருகிறார்.
பெலவத்த, கொஸ்வத்தை, நாடாளுமன்ற மைதானம், பத்தரமுல்லை மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு அவர் உணவு வழங்கி வருகிறார்.கடந்த 18 வருடங்களுக்காக அவர் இந்த சேவை ஆரம்பித்துள்ளார். இந்த காலப்பகுதி 6 சந்தர்ப்பங்களில் மாத்திரமே அவரால் உணவு வழங்க முடியாமல் போயுள்ளது.
அரிசி, கோழி, இறைச்சி, மற்றும் மிருக உணவுகளை பயன்படுத்தி நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக தினமும் 6000 ரூபாய் செலவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் உணவு வழங்க ஆரம்பித்து விடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது வாகனத்தின் சத்தம் கேட்டவுடன் நாய்கள் அனைத்து வந்து விடும். என்னால் முடிந்த வரை உணவுகளை வழங்குவேன். பின்னர் பிற்பகல் 1.30 மணியளவில் உணவு வழங்க ஆரம்பித்து விடுவேன். இரவு 8 மணிவரை உணவு வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சிறிது காலம் வெளியநாடு சென்றுவிட்டு நாடு திரும்பியவர் இந்த சேவையை செய்து வருகின்றாரென சர்வதேச ஊடகமான பிபிசி தெரிவித்துள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like