தமிழர் பகுதியில் இன்றைய சூழலில் இளைஞர்கள் யார்? ஏன் இப்படி விமர்சனம்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.

இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

என்ற போதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன.

இந்த நிலையில் பலர் அதிலும் குறிப்பாக தமிழர் பகுதி இளைஞர்கள் இவர்களுக்கான உணவுப் பொருட்களை திரட்டி கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்ற போதும் தற்போதைய சூழ்நிலையில் இவ்வாறு உதவி செய்யும் இளைஞர்கள் தம்முடைய நடவடிக்கைகளை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

என்ற போதும் இந்த பதிவுகளுக்கு வழங்கப்படும் எதிர்மறை விமர்சனம் தொடர்பில் பொறுப்புள்ள இலங்கையர்காக நாம் வெட்கப்பட வேண்டும்.

இது குறித்து இளைஞரொருவர் தனது கருத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.