சுவிசில் கொரோனோ தொற்றால் உயிரிழந்த தமிழரை காப்பாற்றி இருக்கமுடியும்! தொலைக்காட்சி வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!!

சுவிஸில் வாழ்ந்த இலங்கைத்தமிழரான லோகநாதன் சதாசிவம் (வயது 59) , கொரோனோ தொற்றால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெலிசூரி (TELE ZURI) என்ற தொலைக்காட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சதாசிவம் ஒரு நீரிழிவு நோயாளியாவார் . சுவிஸ் சுகாதாரதுறையால் ஏற்கனவே நீரிழிவு , இருதயநோய்கள் உள்ளோர் கொரோனோ தொற்றின் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது .

இது தொடர்பான சுற்றுநிருபங்கள் வைத்தியசாலைகள் , குடும்பவைத்தியர் போன்றோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது .

அத்தோடு மாகாணரீதியாக குடும்பவைத்தியர்களுக்கான கூட்டத்திலும் , மாகாண வைத்திய துறையால் வலியுறுத்தப்பட்டிருந்தது .

தீவிர கவனமும் கரிசனையையும் கொள்ளுமாறு வைத்தியப்பிரிவு மட்டுமல்ல , தொழில்வழங்குநரும் அக்கறைகொள்ளுமாறு , சுவிஸ் மத்திய அரசு ஏலவே கோரியிருந்தது .

ஆனால் லோகநாதன் சதாசிவம் அவர்கள் , நீரிழிவு நோயாளியாக இருந்தபோதும் , அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்ட போதும் , அது தொடர்பாக குடும்ப வைத்தியர் சரியான நடவடிக்கைகளை மேற்;கொள்ளவில்லை என வைத்தியர் சங்கம் குற்றம் சாட்டுகிறது .

லோகநாதன் தரப்பு குடும்ப வைத்தியரோடு தொடர்பு கொண்ட போது போது , குடும்ப வைத்தியரால் “ இருமலுக்கான சாதாரண இருமல் மருந்தே , தருவேன் “. என குடும்ப வைத்தியர் குறிப்பிட்டது , அவருடைய கடமையீனத்தையும் , பொறுப்பற்ற செயலையும் காட்டியுள்ளது . வைத்தியருக்கு எதிரான சட்டநடவடிக்கையை நிச்சயமாக மாகண சுகாதாரதுறை எடுக்கும் . சில சந்தர்பங்களில் குடும்ப வைத்தியருக்கான அனுமதி கூட நீக்கப்படலாம் .

கொரோனோ தொற்றால் , முற்றுமுழுதாக ஙரையீரல் செயலிழந்து சதாசிவம் லோகநாதன் உயிரிழந்திருக்கலாம்.

குடும்ப வைத்தியரோ , அல்லது உறவினரோ சற்று புத்திசாலித்தனமாக செயற்பட்டு , அவருக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்ட போதாவது 144 இலக்கத்தை அழுத்தி , அம்புலன்ஸ் சேவையை நாடியிருக்கலாம் .

இதன் மூலம் பொருத்தமான சிகிச்சையும் , அவசரசிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலமும் , எநவெநடநச அவருடைய உடல் இயக்கத்திற்கு துணை ஏற்படுத்தியிருக்கும் . இதன் மூலம் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் .

குடும்ப வைத்தியரின் அனுமதி இல்லாமலும் , நோயாளியின் உடல் நிலை மோசமடைகின்றது என கருதினால் , நீங்கள் 144 என்னும் அம்புலன் சேவையை அழைக்கலாம்.

அழைக்கும் போது , அழைப்பவரின் பெயர் , சம்பவ இடம். (முகவரி- தாபாலக இலக்கம் , வீதி , வீட்டுஇலக்கம் , எத்தனையாவது மாடி) என்பனவற்றை தெளிவாக குறிப்பிடவேண்டும் .

நோயாளியின் உடல் நிலைமை பற்றி சுருக்கமாக முடிந்தளவுக்கு விளங்க கூடியளவுக்கு குறிப்பிடுங்கள் .

தேவைக்கும் நிலைமைக்கும் ஏற்ப அம்புலன்ஸ் சேவையானது , அம்புலன்ஸ் மூலமாகவோ , ஹெலிஹொப்டர் மூலமாகவோ தங்களை , முதலுதவி அளித்து வைத்திய சாலைக்கு கொண்டு வருவார்கள் .

இதன் மூலம் நோயாளிக்கான பரிசோதனை , சிகிச்சைக்கான காலதாமங்கள் தவிர்க்கப்பட்டு , சிகிச்சை வெற்றிகண்டு , நோயாளியைக் காப்பாற்றக்கூடியதாக இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள் .

இவ்வாறான மருத்துவத்துறை சார்ந்தோரின் நடவடிக்கையால் பாதிப்புற்ற நோயாளிகள் , உறவினரகள் சுவிஸ் நோயாளர் பாதுகாப்பு அமையத்திற்கு முறையீடு செய்யலாம் .

அந்த அமையம் இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் . பாதிக்கப்பட்டவருக்கு நஸ்ட ஈடும் , பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுக்கும் என்பதனையும் கருத்தில் கொள்ளுங்கள்.

தொலைக்காட்சி செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்