இலங்கையில் 5,000 கிலோ பப்பாசிப்பழத்தால் தனிமைப்படுத்தப்பட்ட 13 பேர்

திஸ்ஸமஹாராமவில் பொதுமக்களிற்கு விநியோகிக்க என கொண்டு செல்லப்பட்ட பப்பாசிப்பழங்களை, திஸ்ஸமஹாராம பொது சுகாதார பரிசோதகர் திருப்பி அனுப்பியுள்ளார்.

சுமார் 5,000 கிலோ பப்பாளிப்பழங்களை ஏற்றிச் சென்ற லொறிக்கு சீல் வைக்கப்பட்டதுடன், பப்பாசிப்பழங்களை இறக்க உதவிய 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவும் அபாயமுள்ளதாக கருதப்படும் புத்தளம், நுரைச்சோலையில் இருந்து இந்த பப்பாசிப்பழங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.

திஸ்ஸமஹாராமவில் உள்ள விகாரையொன்றிற்கு இந்த பப்பாசிப்பழங்கள் கொண்டு செல்லப்பட்டன.

அவற்றை லொறியில் கொண்டு வந்த இருவரிடமும் பொதுச்சுகாதார பரிசோதர்கள் விசாரணை நடத்தியபோது, சூரியவெவ பகுதியில் இருந்து அவற்றை கொண்டு வந்ததாக தெரிவித்திருந்தனர்.

எனினும், அவர்களிடமிருந்த ஆவணங்களை பரிசோதித்தபோது, புத்தளம் பொலிசாரால் வழங்கப்பட்ட ஊரடங்கு பாஸ் அனுமதி இருந்தது.

இதையடுத்தே, நுரைச்சோலையிலிருந்து பப்பாசி ஏற்றிவந்தது தெரிய வந்தது.

இதையடுத்து பப்பாசிப்பழங்கள் மீளவும் லொறியில் ஏற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பப்பாசிப்பழங்களை இறக்குவதற்கு உதவிய திஸ்ஸமஹாராமவ சேர்ந்த 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.