கோப்பாயில் திரு­டப்­பட்ட நகை­க­ளு­டன் இரு­வர் கைது!!

வீடு உடைத்து உள்­நுழைந்து திரு­டப்­பட்ட 3 லட்­சத்து 50 ஆயி­ரம் ரூபா பெறு­ம­தி­யான நகை மற்­றும் பணம் மீட்­கப்­பட்­டன. அவற்­றைத் திரு­டிய குற்­றச்­சாட்­டில் இரண்டு பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று கோப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
இந்­தச் சம்­ப­வம் கோப்­பாய் கோண்­டா­வில் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் முற்­ப­கல் இடம்­பெற்­றது.இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
வீட்டு உரி­மை­யா­ளா்­கள் யாழ்­பா­ணம் சென்­றி­ருந்­த­போது திருட்டு இடம்­பெற்­றது. வீட்­டின் பின்­க­தவை உடைத்து உள்­நு­ளைந்து அவை திரு­டப்­பட்­டி­ருந்­தன. வீடு திரும்­பிய வீட்டு உரி­ம­யா­ளர் பொலி­ஸில் முறை­யிட்­டார்.
விசா­ர­ணை­க­ளின்­போது கோண்­டா­வில் மற்­றும் சுன்­னா­கம் பகு­தி­க­ளைச் சோந்த இரண்­டு­ பே­ரைக் (20, 17 வய­து­டை­ய­வர்­கள்) கைது செய்­த­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.அவா்­க­ளி­டம் இருந்து நகை, பணம் மீட்­கப்­பட்­டன.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like