யாழ்.பல்கலை. மாணவர்களுக்கு இணைய வழி கற்கைகள் – பதிவு செய்யுமாறு அறிவிப்பு

கோரோனா வைரஸ் பரவல் அபாயம் மற்றும் ஊரடங்கு காரணமாகத் தடைப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை, இணைய வழிக் கற்றல் முறைகளினூடாகத் தொடர்வதற்கான ஏற்பாடுகளைப் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தற்போது கல்வி பயிலும் சகல பீடங்களினதும் இளநிலை மாணவர்களுக்குத் தேவையான இணைய வழிக் கற்றல் முறைமைகளைப் பதிவேற்றுவதற்கு வசதியாக சகல மாணவர்களையும் http://www.jfn.ac.lk/index.php/request-detail-of-the-undergraduates-attached-to-the-university-of-jaffna/ என்ற இணைய இணைப்பினூடாகப் பதிவு செய்யுமாறு பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் இணைய வழிக் கற்றைகையைத் தொடர்வதற்கு இலவச டேட்டா இணைப்பு வழங்கப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்தச் சேவையைப் பெறுவதற்கான மாணவர் விவரத்தை பல்கலைக்கழக நிர்வாகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.