கறுப்பின மக்களை மட்டும் தான் கொரோனா அதிகமாக தாக்குகிறதா?.. விஞ்ஞானிகள் வெளியிட்ட முழுதகவல் இதோ..!

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து உலகமெங்கு பரவி கொண்டிருக்கிறது. அதில் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான, அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் நாடுகள் தான்.

இங்கு, உயிரிழப்புகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் தற்போது 420,705 பேர் பாதிப்படைந்தும், 14,369 பேர் உயிரிழந்தும் இருக்கின்றனர்.

இதனால் பல முயற்சிகளை அந்நாட்டு அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தகவல் மக்களிடையே பரவி வருகிறது. அதில் கருப்பு தோல் உடைய மக்களை கொரோனா வைரஸ் தாக்காத என கேட்டுள்ளனர்.

அதில், அமெரிக்காவில், ஒட்டுமொத்த மக்கள் தொகையான, கருப்பின சிறுபான்மையினர். வெள்ளையர்களை காட்டிலும், கருப்பின மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் எத்தனை விகிதம் என பார்த்தால், கருப்பின மக்கள் தொகை 13 சதவீதமும், வெள்ளையர்கள் மக்கள் தொகை 76 சதவீதமும் உள்ளனர்.

இதையடுத்து, கருப்பின மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள், வெள்ளை நிற மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை காட்டிலும், 3 மடங்கு அதிகம் கொரோனாவால் பாதித்துள்ளது என அங்கிருந்து வந்த புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல், உயிரிழப்புகளை எடுத்துக்கொண்டால், கருப்பின மக்கள் அதிமாக வசிக்கும் பகுதிகள், வெள்ளை நிற மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை காட்டிலும் 6 மடங்கு அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வியப்பாக ஒரு கேள்வியை ட்விட்டர் வாயிலாக எழுப்பியுள்ளார். அதில், “மற்றவர்களை காட்டிலும் கருப்பின சமுதாயத்தை 3 அல்லது 4 மடங்கு அதிகமாக கொரோனா பாதித்து இருப்பது ஏன்?” என கேட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடையும் மக்கள், சரியான புள்ளி விபரங்களை வெளியிடுங்கள். ஒட்டுமொத்த நாடுகளில் வெள்ளையர்கள் மற்றும் கருப்பின மக்களின் விபரங்கள் வேண்டும் என்றும் அதற்கான ஆய்வு நடந்து வருகிறது என தெரிகிறது.

எனவே கருப்பாக இருந்தால் கொரோனா தாக்காது என்பது விஞ்ஞானத்திற்கு எதிரான புரளி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.