பிரான்சில் கொரொனா தொற்றினால் மரணமடைந்த யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி

யாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி [(உமாசுதன் சாம்பவி) வயது 31] நேற்று 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil பகுதியில் கொரொனா தொற்றிற்கு இலக்காகி உயிரிந்துள்ளார்.

இவர் யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.

தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

Get real time updates directly on you device, subscribe now.

You might also like