சமுர்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு வேலைதிட்டத்திற்கு வழங்கியுள்ள ஒத்துழைப்பு குறித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பராட்டுக்களை தெவித்துள்ளார்.
இதற்கமைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நிவாரண கடன் வேலைத்திட்டம், மற்றும் கொடுப்பனவுகளை நடைமுறைப்படுத்தல் ஆகியனவற்றிற்கு சமுர்தி திணைக்கள அலுவலக உத்தியோகத்தர்கள் நேரடி பங்களிப்பினை செய்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
சமுர்தி திணைக்கள உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார்.






