கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 49 பேர் தொடர்பில் தகவல் தேடி பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நபர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் தகவல்களை 24 மணித்தியாளத்திற்கு கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் நிலையங்களிடமும் தெரிவித்துள்ளது.
இந்த 49 பேர் இந்தியா, சோமாலியா, ஜோர்தான், இந்தோனேசியா, கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 19ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் வருகைத்தந்துள்ளனர்.
இவர்கள் அக்கரைபற்று, பொத்துவில், ராஜகிரிய, அக்குறன, பதுளை, சிலாபம், புத்தளம், திஹாரி, பேருவளை, முந்தலம், கொழும்பு, மாத்தளை, ரிதிகம, கெக்கிராவ, வெல்லம்பிட்டிய, ஹக்மன, தும்மலசூரிய, திக்வெல்ல, கொல்லன்னாவை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 49 பேரும் நாட்டுக்கு திரும்பிய நாள், அவர்களின் தொலைபேசி இலக்கங்கள், விலாசம், உள்ளிட்டவை தொடர்பிலான முழுமையான விவரம், அரச புலனாய்வு துறையினரால், சி.ஐ.டியினருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவ்வாறானவர்களை 24 மணிநேரத்துக்குள் கைது செய்து, தனிமைப்படுத்தவேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.






