புத்தளத்தில் நீரில் மூழ்கப் போகும் தீவு!!150 குடும்பங்களின் கதி என்ன?

சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவை, இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடலோரத்திலிருந்து சுமார் 500 மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முத்துப்பந்திய தீவைச் சுற்றி நிகழும் கடலரிப்பு காரணமாகவே இந்த அபாயம் தோன்றியுள்ளது.மீன்பிடியை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 150 குடும்பங்கள் இந்தத் தீவில் வசிக்கின்றன.கடலரிப்பில் இருந்து தற்காப்புப் பெற கடந்த காலங்களில் தீவைச் சுற்றி கற்களால் அணைத்தடுப்புகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவை பயனற்ற முயற்சிகள் என தீவைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள கடற்பரப்பில் அமைக்கப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நகரத்தினால், கடல் நீர் நிலத்தை நோக்கி வேகமாக வருவதால் கடலரிப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், நீர்கொழும்பு பகுதிகளில் மீனின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.