கொரோனாவின் விட வறுமை கொடிது! பிள்ளைகளின் பசியை போக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்

தென்னிலங்கையில் இடம்பெற்ற நெஞ்சை பிழியும் சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொரோனா பரவலை தடுக்க அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தினமும் கூலிவேலைக்கு சென்று தம் வாழ்வாதாரத்தை நடத்துபவர்களின் நிலையானது கொரோனாவின் கோரப்பிடியிலும் பார்க்க மிகக்கொடிதாகவே இருக்கின்றது.

இப்படியான நிலையில் தென்னிலங்கையில் தன் பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தென்னை மரத்தில் தேங்காய் பறித்த குற்றச்சாட்டுக்காக தந்தை ஒருவர் விளாக்கமரியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சமூக வலைதளத்தில் முகநூல் வாசி ஒருவரால் பதிவிடப்பட்ட பதிவு இது,

சுமனசேன இடம் கெப்படிபொல கூலித்தொழிலாளி ஊரடங்கால் வருமானம் இல்லை தனது நான்கு குழந்தைகளுக்கும் நோய்வாய்ப்பட்ட மனைவிக்கும் உணவு கொடுக்க வழியில்லை.

தெருக்கடை முதலாளியிடம் கடனுக்கு உணவு பொருட்கள் கேட்டுள்ளார் முதலாளியோ பழைய பாக்கியை கொடுத்துவிட்டு பொருட்கள் வாங்கு என திட்டி அனுப்பியுள்ளார்.

வேறு வழியின்றி சுமனசேன ஒரு தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களில் 10 முதல் 12 தேங்காய்களை பறித்துள்ளார் விற்று நான்கு குழந்தைகளின் பசி போக்க அவ்வளவு தான். ஊரார் ஒன்று திரண்டு கட்டி வைத்து அடித்து இன்று 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளார் என குறித்த முகநூல் வாசி தனது ஆதங்கத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பலரும் கண்டணம் வெளியிட்டுள்ளதுடன் தமது ஆதங்களையும் பதிவிட்டுள்ளனர்.