கொரோனா வைரஸ் தொற்று! பிரான்சில் உயிரிழந்த யாழ்ப்பாண பெண்

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும், உறுப்பினருமாகிய பாலச்சந்திரன் நாகலிங்கத்தின் துணைவியாராகும்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பிரான்சில் இதுவரையில், 117,749 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12,210 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like