செவனகல பிரதேசத்தில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவனர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் பிரதான செயலாளர் சாகர காரியவசத்தினால் உடன் அமுலுக்கு வரும் வகையில பிரதேச சபை உறுப்பினர் நாலக ரணவீரவின் கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக கட்சியை விட்டு அவரை விலக்குவதற்காக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சியின் பிரதான செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
13 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தணமல்வில பிரதேச சபை உறுப்பினர் ஆர்.ஏ. ரணவீர உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






