இன்று மாலை கொழும்பு தாமரைக் கோபுரத்தில் நிகழவுள்ள மாற்றம்

இன்று மாலை 6.45 மணிக்கு, கொழும்பு தாமரை கோபுரத்தின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவிடப்படவுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்க்கிருமிக்கு எதிரான போராட்டத்தில் அயராது நிற்கும் எமது நாட்டின் சுகாதார துறையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் ஏனைய துணைப் பணியாளர்களை கௌரவிக்கும் முகமாக தாமரைக் கோபுரத்தின் மின் விளக்குகள் ஒளிரவிடப்படவுள்ளது.

அவர்களது தன்னலமற்ற அர்ப்பணிப்பிற்கும் சேவைக்கும் மரியாதை செய்வதற்காக விளக்குகள் ஒளிரவிடப்படவுள்ளது

உலகம் முழுவது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரொனா வைரஸ் இலங்கையிலும் பரவி வரும் நிலையில், இதுவைரை 197 பேர் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 54 பேர் குணமடைந்துள்ளார்கள்.

மேலும் கொரோனா நோய் தொற்றின் தீவிரத்தால் 7 பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.