தனது குழந்தையை காண பிரித்தானியாவிலிருந்து ஓடோடி வந்த வந்த இலங்கையருக்கு ஏற்பட்ட சோகம்!!

வெல்லவாய – தனமல்வில வீதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகாரித்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த இளைஞரும் சம்பவ இடத்தில் பலியாகி உள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரித்தானியாவிலிருந்து தனது மனைவியின் பிரசவத்திற்காக திலிப் ரங்கஜித் பெரேரா என்பவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் கோர விபத்து காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் வெல்லவாயவில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ள சென்ற வேளையில், கோர விபத்து ஏற்பட்டுள்ளது.காலி பிரதேசத்தை சேர்ந்த நபர்கள் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக காலியை சேர்ந்த 42 வயதான திலிப் ரங்கஜித் பெரேரா, 38 வயதான தேஷான் வீரசேகர, 43 வயதான ஜீ.ஏ.அனுருத்த கஜவீர மற்றும் 37 வயதான எம்.ஆர்.சமிந்த என்பவர்களே உயிரிழந்துள்ளனர். மேலும், விபத்தில் காயமடைந்த ஐந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூவரும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like