இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை இந்த மாத 20ஆம் திகதிக்குள் நீக்குவது குறித்து தீர்மானிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டவர்,
இந்த மாதத்திற்குள் கொரோனா வைரஸ் தொற்று பரவலை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாத இறுதிக்குள் ஊரங்கு சட்டத்தினை தளர்த்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொளள்ப்பட்டு வருகின்றது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் வைரஸை கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, சமூக விலகலை உறுதி செய்து, ஒரு சாதாரண வாழ்க்கையை பராமரிப்பதில் பொதுமக்கள் அக்கறை கொள்ள வேண்டும்.
மேலும், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் கொண்டாடுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






