பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!!

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சோ்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE இல் வசித்து வந்தவருமான சசிதேவி சதீஸ்குமார் (வயது 46) என்ற மூன்று பிள்ளைகளின் தாயாா் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 11.04.2020 நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றிற்கு இலக்காகி தனிமையில் இருந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

மூன்று பிள்ளைகளில் இரு பிள்ளைகள் கொரோனா தொற்றிற்கு உள்ளாகிக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.