யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு இன்று இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளது.

இந்த 15 பேரும் சுவிஸிலிருந்து வருகை தந்த போதகருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.