எமிஜாக்சனின் காதலருக்கு திடீர் திருமணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகை எமி ஜாக்சன் நடிப்பில் அடுத்ததாக 2.0 படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது.
இந்நிலையில், எமி ஜாக்சன் தற்போது இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி சீரியலான `சூப்பர் கேர்ள்’ சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது முன்னாள் காதலரான பிரதீக் பாபருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எமிஜாக்சன், மறைந்த நடிகை ஸ்மீதா பட்டீலின் மகன் நடிகர் பிரதீக் பாபரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவர் பெயரை மற்றவர்களின் கையில் பச்சை குத்திக் கொண்டனர். ஜோடியாக ஊர் சுற்றினார்கள். பின்னர் பிரிந்துவிட்டனர். இப்போது பிரதீக் பாபர், சான்யா சாகத்தை திருமணம் செய்கிறார். இருவருக்கும் சமீபத்தில் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like