ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு!

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், பயணிகள் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தும் தீர்மானத்தை ஏப்ரல் 30ம் திகதி வரை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

மேலும் சரக்கு விமான சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் எனவும், தேவையேற்படின் சிறப்பு விமான சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள அருகில் உள்ள ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஸ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸின் 24 மணி நேர தொடர்பு நிலையத்தின் +94117771979 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.