தாதியர் பயிற்சிக்கான Online விண்ணப்ப காலம் நீடிப்பு – சுகாதார அமைச்சு தகவல்

தாதியர் பயிற்சிகளுக்காக இணையம் மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினைக் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இவ்வாறு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக தகவல்களை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.