இராணுவ வாகனத்துடன் மோதுண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கடந்த 5ம் திகதி ஊர்காவற்துறை பண்ணை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த முதியவர் (23) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த முதியவர் இருபாலை கோப்பாய் பகுதியினை சேர்ந்த செல்லையா தனபாலசிங்கம் வயது(73) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த இந்த முதியவர் 5ம் திகதி யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. மதியம் சிகிச்சை பெற்று விட்டு பின்னர் பண்ணை வீதியால் சென்றுள்ளார்.

இதன் போது முன்னாள் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனத்துடன் இவர் பின்பக்கமாக மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்திருந்தார்.

பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு வாரமாக அதி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்கிழமை(23) முதியவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர் பொலிஸார்.

இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like