இனியும் இலங்கையில் கொரோனா பரவாது – உறுதி வழங்கிய சுகாதார சேவைப் பணிப்பாளர்

இலங்கையில் இனியும் கொரோனா வைரஸ் பரவாது என்ற உறுதியை சுகாதார சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளே இதற்குக் காரணம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.