கடும் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள முல்லைதீவை சேர்ந்த பெண்! தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை

தனது கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ள பெண் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு சமூக ஊடகங்களில்வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரி – இறம்புக்கந்தை பகுதிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி என்ற பெண்ணே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் வாயிலாக தன்னை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை காப்பாறாவிட்டால் தூக்கிலிட்டு கொலை செய்துவிடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் கணவர் வீட்டாரால் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாகவும், ஆகையால், தன்னையும் தனது குழந்தையையும் காப்பாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.