அலுவலக ஊழியர்களின் வசதி கருதி நாளைமறுதினம் திங்கட்கிழமை தொடக்கம் சிறப்பு தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே இந்த தொடருந்து சேவையைப் பயன்படுத்த முடியும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பேருந்துகளும் 400 தொடருந்துகளும் நாளைமறுதினம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






