பொதுத் தேர்தலை வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய கோரோனா வைரஸ் நிலமையைக் கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஜூன் 20 ம் திகதி நடைபெற வாய்ப்புள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தின் போது தேர்தலை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தேர்தல் திகதி, வேட்பாளர்களின் விருப்பு இலக்கம் தொடர்பான விவரங்கள் அடங்கிய அதிசிறப்பு வர்த்தமானி அறிவிப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.