மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் கைது

மானிப்பாயில் வீடு உடைத்து 30 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்ட கும்பல் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்டசண்டிலிப்பாய் பகுதியில் ஆலய உற்சவமொன்றிற்கு வெளிநாட்டிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களின் வீட்டை உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடிய கும்பலை சேர்ந்தவர்கள்விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்றைய தினம் கைது.

குறித்த வீட்டில் திருடப்பட்ட ஒரு சோடி காப்பு கைப்பற்றப்பட்டுள்ளது ஏனையகளவாடப்பட்டநகைகள் கோப்பாயில் உள்ள ஒரு தனியார் நகைக் கடையில் விற்கப்பட்டுள்ளதும் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நாவற்குழி பகுதியைச் சேர்ந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் மூன்று சந்தேக நபர்களை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் யாழ்ப்பாண விஷேட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரான்சிஸ் தெரிவித்தார்.