யாழில் கட்டுப்பணம் செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டுக்கு சென்றபோது கணவனுக்கு கொரோனா என பொய் சொன்ன பெண் ஒருவர் சுகாதார பிரிவினர் மற்றும் பொலிஸாரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் யாழ்.நல்லுார் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது.
மாதாந்த கட்டுப்பணம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் ஒன்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்துமாறுகோரி நிதி நிறுவன ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது தனது கணவனுக்கு கொரோனா என வீட்டிலிருந்த பெண் பொய் கூறியடுத்து அச்சமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் உடனடியாக விடயத்தை சுகாதார பிரிவுக்கு கூறியுள்ளனர்.
இதனையடுத்து அதிரடியாக வீட்டை முற்றுகையிட்ட சுகாதார பிரிவினர் அங்கு பரிசோதனை செய்தபோது குறித்த பெண் கட்டுப்பணம் செலுத்த பணம் இல்லாமையால் பொய் கூறியமை அம்பலமாகியிருக்கின்றது.
இதனையடுத்து குறித்த பெண்ணிற்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துச்சென்றுள்ளனர்.






