மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்று; பாதித்தோர் எண்ணிக்கை 460ஆனது

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 460ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலயங்களில் 20 கடற்படையினர், கடற்படையினரின் உறவினர் நால்வர் மற்றும் 16 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

118 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

335 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.